திருச்சியில் லோக் அதாலத் : பயனாளிக்கு ரூ.9 கோடியே 75 லட்சம் இழப்பீடு வழங்கிய நீதிபதிகள்
திருச்சியில் லோக் அதாலத் : பயனாளிக்கு ரூ.9 கோடியே 75 லட்சம் இழப்பீடு வழங்கிய நீதிபதிகள்
திருச்சி நீதிமன்றத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். இதில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் காவிரி - குண்டாறு - வைகை நதிநீர் இணைப்பு திட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் ராமநாதன் என்பவருக்கு இழப்பீடு தொகை ரூபாய் 9 கோடியே 75 லட்சத்து 20 ஆயிரத்து 69 -க்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி கிரிஸ்டோபர் வழங்கினார்.
இதன் தொடக்க விழாவில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0