கோவை வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; We The Leader கோஷம் விண்ணதிர்ந்தன

Jun 13, 2026 - 10:19
 0  65
கோவை வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; We The Leader கோஷம் விண்ணதிர்ந்தன

கோவை வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; We The Leader கோஷம் விண்ணதிர்ந்தன

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் அவரது ஆதரவாளர்கள். இது குறித்த விபரம் வருமாறு ;

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அளித்திருந்தார், அவரது கடிதம் ஆனது ஐந்தாம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அன்றைய தினம் இணைய வழியில் பேசிய அவர் புதிய கட்சியை துவக்குவதாக தெரிவித்திருந்தார், அவரது ஆதரவாளர்கள் பலரும் We The Leader என்று குறிப்பிட்டு வருகின்றனர். 

அவர் அறிவித்த குறிப்பிட்ட நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இணைய வழியில் அதில் இணைந்திருந்தனர். பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு அளித்து அவரது கட்சியில் இணைந்திருக்கின்றனர். 

இந்நிலையில் இன்று விமான மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக We The Leader என்று முழக்கமிட்டு பூங்கொத்துக்களை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அனைவரது வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அண்ணாமலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0