லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி: 70 மனுக்கள் பெறப்பட்டு 20 பேருக்கு உடனடியாக பட்டா விநியோகம்!
லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி: 70 மனுக்கள் பெறப்பட்டு 20 பேருக்கு உடனடியாக பட்டா விநியோகம்!
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கோட்டாட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் லால்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மண்டல துணை வட்டாட்சியர் ஞானமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
11 ஊராட்சிகள் பங்கேற்பு;
இந்த ஜமாபந்தியில் லால்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தாளக்குடி, அப்பாதுரை, வாளாடி, புதுக்குடி, மாடக்குடி
மருதூர், நெருஞ்சலகுடி , மாந்துறை, ஆங்கரை உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 70 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை உடனடியாகப் பரிசீலனை செய்த லால்குடி கோட்டாட்சிய ஸ்ரீதர் மற்றும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அதில் 20 மனுக்களுக்குத் தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் தீர்வு கண்டனர்.
அதனடிப்படையில், உடனடியாகப் பட்டா மாறுதல் செய்யப்பட்டதற்கான ஆணைகளை 20 பயனாளிகளுக்கு லால்குடி கோட்டாட்சியர் ஸ்ரீதர் நேரடியாக பயனாளிகளிடம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மீதமுள்ள 50 மனுக்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி, விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த்துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0