வரும் 20-ம் தேதி தடகளப் போட்டிகள் துவக்கம்

Aug 18, 2025 - 13:51
Aug 20, 2025 - 07:43
 0  138
வரும் 20-ம் தேதி தடகளப் போட்டிகள் துவக்கம்

வரும் 20-ம் தேதி தடகளப் போட்டிகள் துவக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் வரும் 20.08.25 மற்றும் 21.08.25 இரண்டு நாள்கள் நடக்கிறது. திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் திருச்சி மாவட்ட தடகள போட்டி வரும் 20.8.2025, காலை 9.30 மணி அளவில் 8, 10, 12,14,16, 18 மற்றும் 20 வயது பிரிவினருக்கான; ஆண்- பெண் இருபாலருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்-2025. தொடக்கவிழாவும், 21.8.2005 அன்று மாலை 5.30 மணிஅளவில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபர் கோப்பை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதலாவதாக தேர்வு பெறும் அணிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது. தகுதி அடிப்டையில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், சென்னையில் வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு, கலந்து கொள்ள, தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தடகளப் போட்டிகளில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தடகள சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. D. ராஜு, செயலாளர், திருச்சி மாவட்ட தடகள சங்கம், திருச்சிராப்பள்ளி. 9965473330.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1