ஒன்றிய ரயில்வே அமைச்சரின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை - அமைச்​சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

Feb 11, 2026 - 15:45
 0  21
ஒன்றிய ரயில்வே அமைச்சரின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை - அமைச்​சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ஒன்றிய ரயில்வே அமைச்சரின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை - அமைச்​சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    ரயில்வே திட்​டங்​களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்​படுத்தி தர தாமதப்​படுத்​து​வ​தாக உண்மைக்குப் புறம்​பான தகவல்​களை மத்​திய ரயில்வே அமைச்​சர் கூறி​யுள்​ள​தாக, மாநில போக்​கு​வரத்​துத்துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.
   திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;  பிரமதருக்கு தமிழக முதல்​வர் அண்​மை​யில் எழு​திய கடிதத்​தில், ‘தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு முன்​னுரிமை கொடுத்து செயல்​படுத்த வேண்​டும்’ என கோரிக்கை வைத்​தார். ஆனால், ரயில்வே திட்​டங்​களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்​படுத்தி தரவில்லை என்று உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களை மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.
   கடந்த 5 ஆண்​டு​களில் 148.65 ஹெக்​டேர் பரப்பு கொண்ட 7 ரயில் திட்​டங்​களுக்கு தமிழக அரசு நிர்​வாக அனு​மதி வழங்​கி, 2 பெரிய திட்​டங்​களுக்கு 128.41 ஹெக்​டேர் பரப்​பில், 73.65 ஹெக்​டேர் நிலம் எடுப்​புப்பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன.
   இதில், மொரப்பூர்- தர்மபுரி புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு 78.11.38 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் 45.00.85 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள நிலங்களில் நில எடுப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில், 4 கிராமங்களில் 24.78.77 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால், மாற்று வழித்தடம் அமைத்திட பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே துறையினரால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரயில்வே துறையினரால் தொழில் நுட்ப முடிவிற்கேற்ப திருத்திய நிலத்திட்ட அட்டவணை 4 கிராமங்களுக்கு ரயில்வே துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  
    தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையிலான 51 கி.மீ ரயில் பாதை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ. ரயில் பாதை திட்டங்களுக்கு தற்போதைய நில மதிப்பின் அடிப்படையில் அரசளவில் அனுமதி வழங்கும் பொருட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. ரயில் பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில், மேற்படித் திட்டங்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் ரயில்வேதுறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
   

திருவனந்​த​புரம்- கன்​னி​யாகுமரி இடையே அகல ரயில் பாதை திட்​டத்தை விரைந்து முடிக்​கத் தேவை​யான ரூ.298.78 கோடி நிதியை மத்​திய ரயில்வேதுறை வழங்​க​வில்​லை. தமிழகத்​தின் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.739.31 கோடி மட்​டுமே நிதி வழங்​கிய​தால், நிலம் எடுப்​ப​தில் சிரமம் உள்​ளது.
  தமிழகத்​தில் 2,500 ஹெக்​டேர்: நிலம் எடுக்க தமிழக அரசு நிர்​வாக அனு​மதி தந்த நிலை​யில், 931.52 ஹெக்​டேர் நிலங்​களுக்கு ரயில்வே நிதி ஒதுக்​க​வில்​லை. தமிழகத்​தில் 19 ரயில்வே திட்​டங்​களுக்கு தேவை​யான 1,273 ஹெக்​டேர் பரப்பு நிலங்​களில், 1,198 ஹெக்​டேர் நிலமெடுப்பு பணி​கள் முடிந்து 94 சதவீதம் நிலம் ரயில்வே நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.
   இப்​படி நிலங்​கள் ஒப்​படைத்​ததை சொல்​லாமல், ஏதோ முழு​வது​மாக புறக்​கணிப்​பது​போல மத்திய அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். திண்​டிவனம் - திரு​வண்​ணா​மலை ரயில் திட்​டம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது என ரயில்வே துறை 2020 ஜூலை 24-ம் தேதி திரு​வண்​ணா​மலை ஆட்​சி​யருக்கு கடிதம் எழு​திய நிலை​யில், அந்த திட்​டத்​துக்கு தமிழக அரசு ஒத்​துழைப்பு வழங்​க​வில்லை என ரயில்வே அமைச்​சர் கூறுகிறார்.
   தூத்​துக்​குடி - மதுரை இடையே​யான திட்​டத்​தை​யும் தமிழக அரசு கைவிடக் கோரிய​தாக ஆதா​ரமின்றி ஒரு செய்​தியை கூறி​யுள்​ளார். தனுஷ்கோடி​யில் ரயில் திட்​டம் செயல்​படுத்​தி​னால் அப்​பகு​தி​யில் கடல்​வாழ் உயி​ரினங்​களின் சூழலியல் பாதிக்​கப்​படும் என்​ப​தால் அதைக் கைவிட வேண்​டும் என தமிழக முதல்​வர் கடிதம் எழு​திய நிலை​யில், அதைக் குறிப்​பி​டா​மல், அந்​தத் திட்​டத்​துக்கு தமிழக அரசு ஒத்​துழைப்பு வழங்​க​வில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.
   மதுரை – அருப்புக்கோட்டை ரயில் பணிகள் தமிழ்நாடு அரசு நிறுத்த கூறியதாக உண்மைக்கு மாறான செய்திகளை ரயில்வே அமைச்சர் கூறுகிறார். நிதியை ஒதுக்காமல் வார்த்தைகளை மட்டும் செலவிடும் பிரதமர் போலவே ரயில்வே அமைச்சரும் உள்ளார்.
     எனவே ரயில்வேதுறையின் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நிலமெடுப்பு செய்து விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறைக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. இப்​படி அவர் சொல்​லும் தகவல்​கள் அனைத்​தும் உண்​மைக்கு புறம்​பாக உள்​ளன. தமிழக முதல்​வர், பிரதமருக்கு எழு​திய கடிதத்​துக்கு முறை​யான பதில் இல்​லாமல், தவறான தகவல்​களை தொடர்ந்து பரப்பி வரு​கிறார்.
   ரயில்வே திட்டங்களுக்கு அறிவிப்பு வழங்கிவிட்டு நிலம் கையகப்படுத்த உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அறிவிப்பு மட்டும் வெளியிடுகிறார்கள் நிதி ஒதுக்குவதில்லை. ஒன்றிய அமைச்சர் கூறும் செய்திகள் அரசியல் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசு பாராமுகமாக செயல்படுகிறார்கள். ஒன்றிய நிதி நிலைக்கு அதிக பங்களிப்பு செய்வது தமிழ்நாடு அரசின் நிதி நிலை தான்.
    முதலமைச்சரின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் முழுமையாக பதில் கூற வேண்டும், ஏதாவது தடங்கல் இருந்தால் அதையும் முதலமைச்சர் சரி செய்து வருகிறார். தமிழ்நாட்டின் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்தி விட்டு ஆதாராத்தோடு பதில் அளிக்க வேண்டும்.
   டபுள் இன்ஜின் இருக்கக்கூடிய உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நிலை அனைவருக்கும் தெரியும். டபுள் இன்ஜின் இருக்கக்கூடிய மாநிலங்களில் பொருளாதார நிலையையும், தமிழ்நாட்டின் பொருளாதார நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால், டபுள் இன்ஜின் என்பது ஏமாற்று வேலை என்பது தெரியும்.
   ஒன்றிய அரசோடு இணக்கமாக செயல்பட்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என கூறுவது தான் பாசிசம். ஒரே நாடு ஒரே கட்சி என்கிற நிலைக்கு செல்வதற்கு தான் நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டல்களைளயும் தாண்டி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், ரயில்வே துறை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அதற்கான நிதியை முழுமையாக அவர்கள் தான் ஒதுக்க வேண்டும்.
   அந்த அந்த மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கை. ஆனால், வரியை மட்டும் பெற்றுக்கொண்டு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இருக்கிறார்கள். அதை போராடி பெற வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம். போராடியதால் தான் சுதந்திரமே கிடைத்தது. ஏற்கனவே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளோம். நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.
   தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை கேட்டு பெற முதலமைச்சரே நேரில் பிரதமரை சென்று சந்தித்துள்ளார். அப்பொழுதும் அவர்கள் நாம் கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லை, தினமும் அவர்களிடம் கையேந்தி நிற்க முடியாது.
   நிர்வாக திறமையின்மையால் தான் தமிழ்நாடு அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பதாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவர் ஆட்சியில் தான் நீட் கொண்டு வரப்பட்டது,, உதய்மின் திட்டம் கொண்டுவரப்பட்டது, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. 
   சிறந்த நிர்வாக திறமை இருப்பதால் தான் நிதி நெருக்கடிகள் இருந்த போதும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். நம்முடைய மாநிலத்திற்கும் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதனை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி தான் வருகிறார்.
   ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை 12ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0