மேகதாது அணை தீர்மானம்; சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம
மேகதாது அணை தீர்மானம்; சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்திற்கு சட்டமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்க முடியாது. ஒருமித்த கருத்தோடு இந்த தீர்மானத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல். காவிரி உரிமையை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி எப்போது உறுதியோடு நிற்கும்.
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானத்தை காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் ஆதரித்து பேசினார்.
இதேபோல் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக அதிமுக உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தினர்.
மேகதாது தனித் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த, ‘மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்ற கருத்தை, தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.
தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையும் ஏற்கப்படுவதாக முதல்வர் விஜய் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
இதனையடுத்து முன்மொழிவு திருத்தப்பட்ட தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0