காவிரி பிரச்சனையில் எங்களோடு துணை நின்றவர் பாரதிராஜா- பி.ஆர்.பாண்டியன் நினைவஞ்சலி
காவிரி பிரச்சனையில் எங்களோடு துணை நின்றவர் பாரதிராஜா- பி.ஆர்.பாண்டியன் நினைவஞ்சலி
காவிரி பிரச்சனையில் எங்களோடு பல்வேறு போராட்டங்களில் களம் கண்டவர் பாரதிராஜா என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ;
இயக்குனர் இமயம் பாரதிராஜா (84) உடல் நலக்குறைவால் காலமானர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஜாதி மதங்களைக் கடந்து கிராமப்புற வாழ்க்கையை திரைப்படமாக்கி எதார்த்தமாக வெளியிட்டவர் பாரதிராஜா. இவரது திரைப்படங்கள் கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.
காவிரி பிரச்சனையில் எங்களோடு பல்வேறு போராட்டங்களில் களம் கண்டவர்.
குறிப்பாக காவிரி பிரச்சனை தீவிரமடைந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த போது, அதற்கு உடனடி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலையில் பல்வேறு திரைப்பட இயக்குனர்கள் உடன் வர என் தலைமையில் பற்றி எரிகிறது தமிழ்நாடு கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமித்து ஆளுநர் காவிரி பிரச்சனையை தீவிரமாக்கி அமைதியை நிலைகுழைய செய்துள்ளார் என குடியரசுத் தலைவருக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கடிதத்தை ஆளுநரிடமே நேரில் கொடுத்து அனுப்பி வைத்தோம். அதை வாங்கி படித்துப் பார்த்த ஆளுநர் மிகுந்த கோபத்திற்கு ஆளானார். ஆனால் அவர் எங்கள் இடத்தில் அதனை வெளிப்படுத்த முன்வரவில்லை. இதனை அடுத்து ஆளுநர் அலுவலக வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம்.
பிறகு காவிரி போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் சென்னையில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டக் களத்தில் மூன்று மணி நேரம் எங்களோடு அண்ணா சிலை அருகில் சாலையிலே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
தமிழக உரிமைக்கான போராட்ட களத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு களம் கண்டவர். இவரது இறப்பு குடும்பத்தாருக்கு மட்டுமின்றி திரைப்படத் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும்.இவரை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கு ஆறுதலையும் ஐயாவிற்கு ஆழ்ந்தஇரங்கலையும்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்டவாறு மன்னார்குடியில் பி. ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0