தபால் நிலைய பெண் ஊழியரிடம் அத்துமீறல் லால்குடி போலீஸ்காரர் கைது

Aug 14, 2025 - 10:18
 0  114
தபால் நிலைய பெண் ஊழியரிடம் அத்துமீறல் லால்குடி போலீஸ்காரர் கைது

தபால் நிலைய பெண் ஊழியரிடம் அத்துமீறல்; லால்குடி போலீஸ்காரர் கைது

திருச்சி பொன்மலை அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் உறையூரைச் சேர்ந்த 25 வயதான பெண், கடந்த 8- ம் தேதி காலை 9 மணியளவில் பணி காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை அம்பேத்கர் திருமணம் மண்டபம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அந்த இளம்பெண் சென்ற வாகனத்தின் முன் குறுக்கே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண், பொன்மலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அஞ்சலக பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். பொது மக்களுக்கு காவல் அரணாக இருக்கக்கூடிய காக்கி சட்டை அணிந்த காவலர்கள் பணியில் பல்வேறு சம்பவங்களில் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருக்கின்றது. வேலியே பயிரை மேயும் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0