சிறுமி முன்பு ஆடைகளை கலைந்த வாலிபர் ; திருச்சியில் 15 நாட்களில் 15 பேர் மீது போக்சோ; காவல்துறை அதிரடி

Jun 11, 2026 - 18:32
 0  150
சிறுமி முன்பு ஆடைகளை கலைந்த வாலிபர் ; திருச்சியில் 15 நாட்களில் 15 பேர் மீது போக்சோ; காவல்துறை அதிரடி

சிறுமி முன்பு ஆடைகளை கலைந்த வாலிபர் ; திருச்சியில் 15 நாட்களில் 15 பேர் மீது போக்சோ; காவல்துறை அதிரடி

திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது 15 வயது மகளுடன் அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் மலையப்பன் நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குஜிலி என்ற ரங்கநாதன் (வயது 37) குடிபோதையில் அங்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியான சைகைகளை காட்டியும், ஆடைகளை கலைந்தும் சிறுமி முன்பு நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் சம்பவம் குறித்து பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குஜிலி என்கின்ற ரெங்க நாதனை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

சரித்திர பதிவேடு குற்றவாளியான குயிலி என்கிற ரெங்கநாதன்மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்த இரண்டே நாளில் போக்சோ வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 15 நாட்களில் திருச்சியில் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் ஒருவரும், திருச்சி முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி ரயில் நிலையம் அருகில் லாட்ஜில் ஒரு இளம் பெண்ணிற்கு போதை மாத்திரை கொடுத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு பேரும், நேற்று திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர் என இதுவரை 14பேர் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 15 ஆவதாக ஒரு பாலியல் வன்கொடுமையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0