தேசிய அளவிலான கராத்தே போட்டி; வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

Jun 10, 2026 - 17:05
 0  65
தேசிய அளவிலான கராத்தே போட்டி; வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான கராத்தே போட்டி; வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 3 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதிவரை நடைபெற்றது.

தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் இருந்து சுமார் 2000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். 

இதில், தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பான முறையில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் ஜெரின் என்ற மாணவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று திருச்சிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பதக்கம் வென்ற மாணவன் ஜெரின் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சுதாகர் ஆகிய இருவருக்கும் திருச்சி விமான நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என்றும் உறுதிபட தெரிவித்தார் மாணவர் ஜெரின்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0