முதியவரிடம் நகையை பறித்த தவெக நிர்வாகி கைது
திருட்டு வழக்கில் தவெக நிர்வாகி கைது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை வடக்கு தெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்ற முதியவர் வீட்டில் தமது அறையில் படுத்திருந்தார்.
அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து கஸ்தூரி கழுத்தில் இருந்த தங்க செயினைப் பறிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சத்தம் போட்டு கத்தவே அவரது மருமகள் சரண்யா வீட்டுக்குள் வந்துள்ளார்.
உடனே, திருட வந்தவன் அங்கிருந்து கருவேலங்காட்டுக்குள் தப்பிச் சென்று மறைந்து கொண்டான்.
கஸ்தூரி சத்தமிட்டதால் அக்கம் பக்கத்தினரும் ஒடி வந்து கருவேலங்காட்டிற்குள் சென்று பதுங்கியிருந்த செயின் பறிக்க முயன்றவனைப் பிடித்து வந்து மின்விநியோக தூணில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி(26) என்பதும் தவெக-வில் கிளை கழகப் பொறுப்பாளராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தில்ஷாத்பேகம் என்ற முதியவரிடம் 14 கிராம் தங்க நகை திருடியதையும் போலீஸரிடம் ஒப்புக்கொண்டார்.
பாரதியிடம் இருந்து அந்த 14 கிராம் நகையை மீட்ட போலீஸார் பாரதியை நாகை சிறையில் அடைத்தனர்.
தமிழக வெற்றி கழக நிர்வாகி திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0