திருச்சி: இன்ஸ்டா மோகம் ;14 வயது சிறுமி எஸ்கேப்: பாலியல் அத்துமீறல்; 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது
திருச்சி: இன்ஸ்டா மோகம் ;14 வயது சிறுமி எஸ்கேப்: பாலியல் அத்துமீறல்; 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது
திருச்சி முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை அவரது வீட்டாரிடம் ஒப்படைத்தபோது அந்த சிறுமி அவர்களுடன் செல்ல மறுத்தார். இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்த சிறுமி அங்குள்ளவர்களிடம் இன்ஸ்ட்டாவில் என்னோடு பழகிய சிலர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறினார்.
இதையடுத்து காப்பகத்தில் உள்ளவர்கள் குழந்தைகள் நலஅலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல குழுவினர் அந்த சிறுமியை சந்தித்து நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள்நல அலுவலர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கோட்டை மகளிர் போலீசாருக்கு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை மகளிர் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அந்த 14 வயது சிறுமிக்கு முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது.
இதையடுத்து, முதலியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர், மோகன்ராஜ் மற்றும் 7 சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கோட்டை மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர். சிறுவர்களை தஞ்சாவூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0