இன்று பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
இன்று பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து, திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். கடுமையான கோடை வெயில் காரணமாக ஜூன் 1-ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள், சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்குத் திரும்பியுள்ள மாணவர்களுக்கு வகுப்புகளிலேயே, பாட புத்தகங்கள் இன்றே வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், திருச்சி பாப்பாகுறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று புதிதாக வருகை தந்த பள்ளி மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அப்துல் ஜாபர் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். ஆசிரியர் சங்க செயலாளர் ஆறுமுகம், மற்றும் முஜிபுர் ரஹ்மான், கலை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
இதேபோல் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டல் வசதியுடன் தங்கி படிக்கும் மாணவர்கள் தத்தம் பெற்றோருடன் பெட்டி, படுக்கைகளுடன் இன்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள், அலுவலர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0