திருச்சி மாவட்டத்தில் வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில்  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணம்

Aug 11, 2025 - 22:26
 0  15
திருச்சி மாவட்டத்தில் வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில்  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணம்

திருச்சி மாவட்டத்தில் வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில்  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணம்

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து   பிரசாரம் செய்து வருகிறார்.  அவர் திருச்சி மாவட்டத்தில் வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில்  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை, மற்றும் மேற்கு தொகுதிக்குட்பட்ட புத்தூர் நால்ரோடு பகுதியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

திருச்சி மாநகரில்  எந்தெந்த இடங்களில் எடப்பாடி நிகழ்ச்சிகளை நடத்துவது என  இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.  இதற்காக  அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி  திருச்சி வந்தார்.  திருச்சி  மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ‌ சீனிவாசன்   முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி,  விஜயபாஸ்கர்,  வளர்மதி, முன்னாள் எம்.பி.  ரத்தினவேல்,  முன்னாள் ஆவின் சேர்மன் காா்த்திகேயன்,  ஆகியோரும் உடன் சென்று  நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து  தங்கமணி ஆலோசனைகள்  வழங்கினார்.

ஜெ. பேரவை மாநில துணை செயலாளர்கள் ஆர்.ஜோதிவாணன், அரவிந்தன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பி.ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, பகுதி கழக செயலாளர்கள் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இதில்  கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0