துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் அதிரடி சோதனை
துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் அதிரடி சோதனை
திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத் தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்தப், புகார்களின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் இன்று துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவாளர், அலுவலக ஆவணங்கள், கணினி பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனையால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, துறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இன்றுதான் பதிவாளர் வெங்கடேசன் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0