ஆட்டோவை தேர் போல் இழுத்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

Jun 4, 2026 - 16:27
 0  19
ஆட்டோவை தேர் போல் இழுத்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

ஆட்டோவை தேர் போல் இழுத்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸா இருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மத்திய மோடி அரசின் போக்கைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, ஆட்டோ ஒன்றிற்கு கயிறு கட்டி, தேரை வடம் பிடித்து இழுப்பது போல சாலையில் இழுத்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஆட்டோவை கயிறு கட்டி இழுப்பதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிவா, ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாநில துணை செயலாளர் பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் பெட்ரோல் விலை படிப்படியாக 10 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகச் சமையல் சிலிண்டராக இருந்தாலும், வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டராக இருந்தாலும் கடுமையான விலை உயர்வைச் சந்தித்துள்ளன.

ஈரான் அமெரிக்க போரில் அமெரிக்காவிற்குச் சார்பான நிலையை எடுத்த காரணத்தால், அமெரிக்காவும் பொருளாதார ரீதியாக இந்தியாவைத் தாக்குகிறது, பல்வேறு நாடுகளில் இருந்தும் நமக்கு நெருக்கடிகள் வருகின்றன என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0